SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு 11க்கு ஒத்திவைப்பு

2018-12-07@ 02:17:01

புதுடெல்லி: அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓபிஎஸ் உட்பட 11பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்தாண்டு வாக்களித்த விவகாரத்தில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என  திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை முதலாவதாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 இதில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில்,” ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்காது என்பது ஏற்க கூடியது இல்லை. இந்த விவகாரத்தில் சபாநாயகர் தனபால் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் செயல்பட்டார் என்றும், அவர் சரியான நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் அதிமுக கண்டிப்பாக ஆட்சியில் இருந்திருக்க முடியாது என திமுக தரப்பில் கடும் குற்றாச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக்பூஷன், அப்துநசீர் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களும் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்றக்கொண்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்