SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 ஆண்டுகளில் 14,926 பேரை காவு வாங்கியது தீவிரவாத தாக்குதல்களை விட சாலை பள்ளத்தால் அதிக பலி: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

2018-12-07@ 02:16:56

புதுடெல்லி: ‘நாட்டில் சாலைகளில் காணப்படும் பள்ளத்தினால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடக்கும் சாலை விபத்துக்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை கடந்த ஜூலை 20ம் தேதி விசாரித்தபோது,  சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுை அமைத்தது.  இந்த வழக்கு நீதிபதி மதன் பி லோகூர் தலைமையி்லான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது ஆய்வறிக்கையை நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் குழு தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “2013-2017ம் ஆண்டு வரை சாலைகளில் காணப்படும் பள்ளங்களினால் ஏற்பட்ட விபத்துக்களில் 14,926 பேர் இறந்துள்ளது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகளை  ஏற்றுக்ெகாள்ள முடியாது.  எல்லை அல்லது தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகப்படியான உயிரிழப்புகள் சாலை பள்ளங்களினால் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் அதிகாரிகள் சாலைகளை சரியாக பராமரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சாலை பாதுகாப்பு கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்