SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ், துணை ராணுவம் குவிப்பு: ராஜஸ்தான், தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்

2018-12-07@ 02:16:50

புதுடெல்லி: ராஜஸ்தான், தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், சட்டீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டது. ராஜஸ்தான்,  தெலங்கானாவில் இன்று தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிகிறது. இதற்காக இரு மாநிலங்களிலும்  போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200ல் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங் இறந்ததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  மொத்தம் 4.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 51,965 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 1,777 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 
ist attack, murders, federal government


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்