அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் பணி தொடங்கும் 4 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ்: ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தகவல்
2018-12-07@ 00:37:23

மதுரை: அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், 4 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மதுரையில் இதுவரை பணிகள் துவங்கவில்லை. தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிடவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் ெபறவும், கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடும் பணியை விரைவுப்படுத்தவும், தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, மத்திய சுகாதாரத்துறை செயலர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையில், ‘‘மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைவதற்கான இடத்தை தமிழக அரசு ஜூன் 19ல் இறுதி செய்தது. எய்ம்ஸ்க்கான செலவின நிதிக்குழு திட்டம் குறித்து ஆலோசித்தது. இக்குழுவினர் நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதியமைச்சகத்துடன் ஆலோசித்தனர். இவர்களின் கூட்டம் டிச. 4ல் நடந்தது. செலவின நிதிக்குழுவின் திட்டம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், கட்டுமானப் பணிகள் துவங்கி 45 மாதத்திற்குள் (சுமார் 4 ஆண்டுகள்) செயல்பாட்டிற்கு வரும். இந்த முடிவுகள் அனைத்தும் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகே இறுதியாகும்,’’ என கூறப்பட்டிருந்தது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.
மேலும் செய்திகள்
உடுமலை, அமராவதி வனத்தில் வறட்சி : வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி துவக்கம்
தலைமுடியில் உயிரி உரம் தயாரித்து அரசு பள்ளி மாணவிகள் அசத்தல் : மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர்
தோகைமலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு பாத யாத்திரை
50 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட கறம்பக்குடி அரசு பேருந்து திடீர் நிறுத்தம்
தங்கச்சிமடம் மீனவர்களுக்கு வழங்க ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொச்சியில் வெள்ளோட்டம்
ஒகேனக்கல் மலைப்பாதையில் உலா வரும் யானைகளுடன் செல்பி எடுக்கும் வாலிபர்கள்
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்