SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி பிரச்னையில் கருணாநிதி பெயரை குறிப்பிடாதது ஏன்?: முதல்வரிடம் துரைமுருகன் கேள்வி

2018-12-07@ 00:37:17

சென்னை: காவிரி பிரச்னையில் கருணாநிதி பெயரை முதல்வர் குறிப்பிடாதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது, ஜெ.அன்பழகன் பேசியதால் சட்டப்பேரவையில் திடீர் கூச்சல், அமளி ஏற்பட்டது.மேகதாது குறித்த தீர்மானத்தின் மீது அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசி முடித்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்து, தீர்மானத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, “தீர்மானத்தின் மீது முதல்வர் நீண்ட பதில் அளித்தார். அவர் அதிமுகவுக்கு, எங்களுக்கு (திமுக), நாட்டுக்கும்தான் முதல்வர். அப்படி இருக்கும்போது காவிரி பிரச்னையில் நடவடிக்கை எடுத்த கருணாநிதி பற்றியும் அவர் சொல்லி இருக்க வேண்டும்.காவிரி பிரச்னையில் முதலில் கர்நாடக அரசிடம் பேசியது கலைஞர்தான்.  அந்த பிரச்னையை மத்திய அரசிடம் கொண்டுபோனதும் அவர்தான். நடுவர்மன்றம், இடைக்கால தீர்ப்பு கிடைத்தது, இறுதி தீர்ப்பை பெற்று தந்ததும் கருணாநிதிதான். இதை மறைத்துவிட்டு பேசுவதையும், கருணாநிதி பெயரை இதில் முதல்வர் சொல்லாததையும் நினைத்து நான் வருத்தப்படுகிறேன். இந்த இடத்தில் எங்களது எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்புகூட செய்திருக்க முடியும். ஆனாலும், தமிழக மக்களின் முக்கிய பிரச்னை என்ற ஒரே காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்யாமல், சட்டமன்றத்தில் இருந்து தீர்மானத்தை நிறைவேற்றி தருகிறோம்” என்றார்.

முதல்வர் எடப்பாடி: “எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவரும் இங்கே பேசியபோது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்றே பேசினார்கள். அதனால்தான் நாங்கள் என்ன செய்தோம் என்று சொன்னேன். மற்றபடி, உங்கள் தலைவரை பற்றி எதுவும் தவறாக நான் பேசவில்லை” என்றார்.உடனே, ஜெ.அன்பழகன் (திமுக) எழுந்து, முதல்வரை நோக்கி கைகாட்டி ஏதோ ஆவேசமாக பேசினார். அவருக்கு பதில் கொடுக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் பலரும் எழுந்து நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கடும் கூச்சல், அமளி ஏற்பட்டது.முதல்வர்: நான் ஒரு விவசாயி. இந்த பிரச்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதனால் எனக்கு பேச உரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுகிறேன். உங்கள் தலைவரை பற்றி எந்த இடத்திலும் தவறாக பேசவில்லை.

(மீண்டும் ஜெ.அன்பழகன் எழுந்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.)சபாநாயகர் தனபால்: உறுப்பினர் அன்பழகன் பேசியது சரியில்லை.  முதல்வர்: நான் எந்த முரண்பட்ட கருத்தையும் கூறவில்லை. என்னை ஒருமையில் பேசுவது சரியா?சபாநாயகர்: மேற்கொண்டு இதுபற்றி யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கூறியதுடன், தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விடுவதாக கூறினார்.இதைத்தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் மாலை 5.35 மணிக்கு முடிந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்