ஆபாசமின்றி நடன நிகழ்ச்சிக்கு விதிகளை ஏற்படுத்தவேண்டும்: உள்துறை செயலருக்கு உத்தரவு
2018-12-07@ 00:37:13

மதுரை: ஆபாசமின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தேவையான விதிகளை ஏற்படுத்த உள்துறை செயலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சின்ன அனுப்பானடியை சேர்ந்த சீனிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தின் பாரம்பரிய நாடக கலைஞனாக உள்ளேன். தமிழ் கலாச்சாரம், மரபு, பண்பாடு மாறாமல் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பார்த்து ரசிக்கும் வகையில் நாடகங்கள் கலை நிகழ்ச்சிகள் முன்பு இருந்தது. கடந்த 2000ம் ஆண்டு முதல் ஆடல், பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி என்ற பெயரில் பொதுமேடைகளில் ஆண், பெண் பேதமின்றி அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனங்களே நடக்கின்றன. தமிழர்களின் பாரம்பரியம் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் நலிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்கும்விதமாக நாடகம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய கலெக்டர்கள் அனுமதிப்பது குறித்து உள்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பல இடங்களில் இதை நிறைவேற்றவில்லை. எனவே, அதை பின்பற்றி பாரம்பரிய கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், ஆபாச நிகழ்ச்சிகளை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தமிழகத்தில் ஆபாசமின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தவும், மீறினால் தடை விதிக்கவும் தேவையான விதிகளையும், வழிகாட்டுதல்களையும் 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
உடுமலை, அமராவதி வனத்தில் வறட்சி : வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி துவக்கம்
தலைமுடியில் உயிரி உரம் தயாரித்து அரசு பள்ளி மாணவிகள் அசத்தல் : மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர்
தோகைமலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு பாத யாத்திரை
50 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட கறம்பக்குடி அரசு பேருந்து திடீர் நிறுத்தம்
தங்கச்சிமடம் மீனவர்களுக்கு வழங்க ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொச்சியில் வெள்ளோட்டம்
ஒகேனக்கல் மலைப்பாதையில் உலா வரும் யானைகளுடன் செல்பி எடுக்கும் வாலிபர்கள்
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்