SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோயாளிகள் பாதிக்கப்படுவதாக வழக்கு டாக்டர்கள் ஸ்டிரைக்கை தவிர்க்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: மருத்துவ கல்வி இயக்குனர் பதிலளிக்க உத்தரவு

2018-12-07@ 00:37:04

மதுரை:  மதுரை, கோமதிபுரத்தை சேர்ந்த முகம்மது யூனுஷ் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் தந்தையின் சிகிச்சைக்காக டிச. 4ல் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.  அங்கு நோயாளிகள் அதிகளவு காத்திருந்தனர். அன்று டாக்டர்கள் ஸ்டிரைக்கால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கும் நிலை இருந்தது. அதேநேரம் டிச. 8 (நாளை) முதல் டிச. 13 வரை தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்போது சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்வதில்லை. கிராமப்புறங்களுக்கு போவதில்லை என கூறியுள்ளனர். இதனால் மேலும் நோயாளிகள் பாதிக்கும் நிலை உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல மாவட்டங்களில் நிவாரணப்பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கும். எனவே, அரசு மருத்துவர்கள் எந்தவிதத்திலும் ஸ்டிரைக்கில் பங்கேற்கவும், ஈடுபடவும் தடை விதிக்க ேவண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
 இந்த மனுவை அவசர வழக்காக நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கை தவிர்க்க அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர், செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்