SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யக்கோரி வழக்கு: விசாரணைக்கு ஏற்கப்படுமா?

2018-12-07@ 00:37:02

மதுரை:  அதிமுக உறுப்பினர் ஒருவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி விதிப்படி, புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்து அவர் கையெழுத்திட்டு பொதுக்குழுவுக்கு அழைக்க வேண்டும். ஆனால், பொதுச்செயலாளரின் கையெழுத்தில்லாமல் நடந்த கூட்டத்தில், சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்தது தவறு. மீண்டும் விதிப்படி நடக்காத கூட்டத்தில் சசிகலாவை நீக்கியதுடன் பொதுச்செயலாளர் பதவியையும் ரத்து செய்து, இதே அதிகாரத்துடன் கூடிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பதவிகளை உருவாக்கியுள்ளனர்.

 எனவே, கட்சி விதிப்படி 3 மாதத்திற்குள் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்தவும், 5.12.2016 அன்று 5 ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்தவர்களே போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும் என்றும் உத்தரவிட வேண்டும். சசிகலா தற்காலிக ெபாதுச்செயலாளராக தேர்வு, பின்னர் பொதுச் செயலாளர் பதவிைய நீக்கி, ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்த தீர்மானங்களை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனகூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன் நேற்று பட்டியலிடப்பட்டது. மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்