SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தை காக்க மதுவிலக்கு முக்கியம்: அன்புமணி வலியுறுத்தல்

2018-12-07@ 00:37:00

சென்னை: தமிழகத்தை காக்க மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திண்டுக்கல் சிலுக்குவார்ப்பட்டியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கும், கள்ளச்சாராய விலக்கும் எந்த லட்சணத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.  தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ராமதாஸ், கடந்த 37 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதை செயல்படுத்தாத தமிழக அரசு கடந்த 15 ஆண்டுகளாக நேரடியாகவே டாஸ்மாக் மூலம் மதுவிற்பனை செய்து வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி கிடைத்துள்ள போதிலும் மதுவை இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. எந்தக் கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டி மதுவிலக்கை தமிழக அரசு தவிர்த்து வந்ததோ, அதே கள்ளச்சாராயத்தைக் குடித்து, அதுவும் ரசாயனம் கலந்த சாராயத்தை குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்ததால் அங்கு மட்டும்தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கருதக்கூடாது.  கள்ளச்சாராயம் எந்த இடையூறும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை. இதற்கு ஆளுங்கட்சியினரும், காவல்துறையினரும் உடந்தை என்பது ஊரறிந்த ரகசியம். வெளியில் தெரியாமல்  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், வட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை தொடருகிறது. ஆகவே கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என வேறுபாடு பார்க்கத் தேவையில்லை. தமிழகத்தைக் காக்க எல்லா மதுவையும் ஒழித்து மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். எனவே, தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுடன் பா.ம.க. வகுத்துள்ள செயல்திட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்