SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகதாது அணை கட்டுவதை தடுக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட வேண்டும்: சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஆவேச பேச்சு

2018-12-07@ 00:36:56

சென்னை: மேகதாது அணை கட்டுவதை தடுக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும் என்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஆவேசமாக பேசினார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மீது ஒவ்வொரு கட்சி தலைவர்களும் பேசிய விபரம் வருமாறு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர்: தமிழகத்துக்கு  தண்ணீர் வழங்கக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு பாஜ சாதகமான ஒரு நிலையை  எடுத்துள்ளது. மத்திய ஆட்சியாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து  வருகிறது. காவிரி நீர் தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.  ஆனால், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது மாநில ஆட்சியை கேள்விக்குறியாகி  விட்டது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வரையில் விரைவில் கூட உள்ள  நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். இந்த  போராட்டத்தில் கட்சி மறந்து செயல்பட வேண்டும். அப்படியும்  செவிசாய்க்கவில்லை வரி கொடா இயக்கத்தை தொடங்க வேண்டும். காவிரியில் அணை  கட்டுவதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறேன்.

மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி:  தமிழகத்தில் அவசர நெருக்கடி நிலவும் சூழ்நிலையில், மக்கள் கருத்துகளுக்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. திபெத்தில் தொடங்கி சீனா வழியாக இந்தியா வழியாக பிரமபுத்திரா நதி பாய்கிறது. இதன் குறுக்கே நீர்மின் நிலையம் அமைக்கவோ, அணை கட்டவோ சீனா முயற்சிக்கும் போது மத்திய அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்கிறது. அதுபோன்று தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தமிழகம் பாலைவனமாகிவிடக்கூடாது என்பதை புரிந்து கொண்டு மத்திய அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது.  ஆணையத்துக்கு பல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடக அரசியலை கருத்தில் கொண்டு பாஜ அரசு காய் நகர்த்துகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்கிறேன்.கொங்கு இளைஞர் பேரவை எம்எல்ஏ தனியரசு: காவிரி தண்ணீரை தட்டிப்பறிக்கும் வகையிலும்; குடிநீர், விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்யும் வகையில் உள்ளது மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி. இது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக உரிமையை தட்டிப்பறிக்கும் செயலாகும்.

ஒரு வார்த்தையில் முடித்த டிடிவி
பேரவையில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எழுந்து, ‘‘அரசின் இந்த தனித் தீர்மானத்தை ஆதரிக்கிறேன்’’ என்ற ஒற்றை வார்த்தையுடன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவர் பரபரப்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே வார்த்தையில் பேசி அமர்ந்ததை மற்ற உறுப்பினர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்