SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால் அணை கட்டுவதை தடுக்க முடியும்: பேரவையில் ராமசாமி பேச்சு

2018-12-07@ 00:36:50

சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால்தான் அணை கட்டுவதை தடுக்க முடியும் என்று கே.ஆர்.ராமசாமி பேசினார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மீது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசியதாவது: காவிரியில் தண்ணீர் பெறுவதில் தமிழகத்துக்கு அதிகமாக உரிமை இருக்கிறது என்பது தெரிகிறது. இந்த பிரச்னையில் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர். ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் அணை கட்டுவதை தடுக்க முடியும். சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு ஏன் இந்த காலதாமதம். தமிழக அரசு முறையாக செயல்பட்டிருந்தால் இந்த பாதிப்பு வந்திருக்காது. இதை சரி செய்ய வேண்டும். ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. அரசு செய்யாததை எதிர்கட்சி தலைவர் செய்திருக்கிறார். அவரை பாராட்டுகிறேன்.

மேகதாது அணை கட்ட ₹6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். இந்த அணை கட்ட அவ்வளவு தேவைப்படாது. ஒரு அணையா இரண்டு அணையா என்பதை பார்க்க வேண்டும். இதிலும் ஏமாந்து விடக்கூடாது. அதை தடுக்கும் இடத்தில் நீங்கள் (அதிமுக) இருக்கிறீர்கள். நீங்கள் செய்யாவிட்டால் நாங்கள் செய்வோம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மேகதாது பிரச்னை பற்றி அதற்கான தீர்மானத்தை பற்றி மட்டும் பேசுங்கள். இல்லாவிட்டால் காவிரி பிரச்னையில் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை பற்றி விரிவாக சொல்ல வேண்டி வரும். சட்டம் போராட்டம் நடத்தி காவிரி தீர்ப்பை பெற்று தந்தவர் ஜெயலலிதா.  (தொடர்ந்து அவருக்கு பதில் அளித்து கே.ஆர்.ராமசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன் ஆகியோர் பேசிய பேச்சுகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன) கே.ஆர்.ராமசாமி: தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜவால் வெற்றி பெற முடியாது. நான் அதிமுகவை சொல்லவில்லை. கர்நாடகத்தை ஆளலாம் என்ற எண்ணத்தில் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றனர். இதை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.  இந்த தனித் தீர்மானத்தை காங்கிரஸ் சார்பில்  முழு மனதுடன் ஆதரிக்கிறோம். தவறு செய்யும் மத்திய அரசு மீது தமிழக அரசின் கோபப் பார்வை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அணையை கட்டிவிடுவார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CanadaSyrianChildren

  கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

 • DroneLanternChina

  ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

 • AttukalPongalaKerala

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

 • mahipoornima

  கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

 • AeroShowBangalore19

  பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்