SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்கவும் மறுப்பு 3 புதுவை எம்எல்ஏ நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2018-12-07@ 00:36:29

புதுடெல்லி:  புதுவை மாநில ஆளுநர் கிரன்பேடி கடந்த ஆண்டு பாஜ கட்சியை சார்ந்த மூன்று பேரை எம்எல்ஏக்களாக நியமனம் செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.புதுவை பாஜ தலைவர் சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகிய நியமன எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் கிரண் பேடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களின் நியமனத்தை சபாநாயகர்  வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக புதுவை சட்டப்பேரவை உறுப்பினறும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்குள்  அனுமதிக்க வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. .உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கேகே.வேணுகோபால் வாதத்தில்,”புதுவை  மாநிலத்தில் 3 எம்எல்ஏக்களை ஆளுநர் கிரண்பேடி நியமனம் செய்ததில் எந்தவித தவறோ, முறைகேடோ நடைபெறவில்லை. இதில் அவருக்கு முழு அதிகாரம் உண்டு. என வாதிட்டார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தில், புதுவை மாநிலத்திற்கு என தனிப்பட்ட எந்த சலுகைகையும் வழங்க முடியாது. ஏனெனில் அவர்கள் மூவரும் நியமன சட்டமன்ற  உறுப்பினர்கள் என்பது மட்டுமே ஆகும்.
இதுபோன்ற பல்வேறு வழக்குகளை விசாரித்து எம்எல்ஏக்களின் நியமனைத்தை ரத்து செய்த வரலாறு நீதிமன்றத்திற்கு உண்டு என வாதிட்டார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 20ம் தேதி ஒத்திவைத்தனர்.  உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷன் மற்றும் அப்துல்நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில்,”புதுவை அரசில் ஆளுநர் கிரண் பேடி சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகிய மூன்று பேருக்கும் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்பு செய்து வைத்ததில் எந்தவித முறைகேடும் நடைபெற்றதாக நீதிமன்றம்  கருதவில்லை. இதில் புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு தலையிட அதிகாரம் உண்டு.

 இந்த நியமனத்தில் கண்டிப்பாக மாநில அரசு தலையிட அதிகாரம் கிடையாது என தெரிவித்த நீதிபதிகள் மூன்று பாஜ எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும். அவர்களுக்கும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்  அனைத்து உரிமைகளையும் அரசு செய்து தர வேண்டும். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது என நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து  பாஜ நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரும் சட்டமன்ற வளாகத்திற்குள் செல்வது தற்போது மீண்டும் உறுதியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்