கேரள வெள்ள நிவாரணத்துக்கு கூடுதலாக 3,048 கோடி நிதி: மத்திய அரசு வழங்குகிறது
2018-12-07@ 00:36:28

புதுடெல்லி: கேரள வெள்ள நிவாரணத்துக்கு கூடுதலாக ₹3,048 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு வழங்குகிறது. கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தது. இதனால் அங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 14 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி 488 பேர் பலியாயினர். கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ₹4,700 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கேரள அரசு கேட்டிருந்தது.
உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் ₹100 கோடி நிவாரணத்தை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அறிவித்தார்.
அதன் பின் பிரதமர் மோடி ₹500 கோடி நிவாரண நிதியை கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அறிவித்தார். இது முன் பணம் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளா, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஆந்திராவுக்கு கூடுதலாக மத்திய நிதி வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்தியக் குழு ஆய்வறிக்கையின் படி கேரளாவுக்கு கூடுதலாக ₹3,048.39 கோடியும், புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு ₹539.52 கோடியும், நாகாலாந்து ₹131.16 கோடியும் வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்
பாதை வசதி இல்லாத, அபாயகரமான வனப்பகுதி திருமலை குமாரதாரா தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
புல்வாமா தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு
இந்தியாவில் 5.7 கோடி பேர் மதுபழக்கத்திற்கு அடிமை : எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு : மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி அறிவிப்பு
காஷ்மீரில் ராணுவ வீரர்களின் வாகன இயக்க விதிகளில் மாற்றம்!
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்