SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 6வது இடம் பெற்று சாதனை!

2018-12-06@ 16:50:37

சென்னை : உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை முந்தி திருப்பூர் நகரம் சாதனை படைத்துள்ளது. உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் முதல் பத்து இடங்களையும் இந்திய நகரங்கள் பிடித்துள்ளன. முதல் இடத்தில் குஜராத்தின் சூரத் நகரம், அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக திருப்பூர் உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 6வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது. மேலும் வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக உள்ளதால் பட்டியலில் சென்னையை முந்தி இருக்கிறது.

அதேபோல் திருச்சியும் இந்த பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளது. திருச்சி 8.29 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. சென்னை 8.17 சதவிகித வளர்ச்சியை பெற்று 9வது இடத்தில் உள்ளது. சென்னையைவிட திருப்பூர் 0.19 சதவிகிதமும், திருச்சி 0.12 சதவிகிதமும் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் பெரிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களை விட திருப்பூர் அதிக வளர்ச்சியை பெற்று இருக்கிறது. திருப்பூரில் சிறிய அளவிலாக பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு நடைபெற்று வரும் நூல் உற்பத்தியும், பின்னலாடை உற்பத்தியும் பெரிய அளவில் அந்நகரத்தை முன்னேற்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்