SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2019 முதல் நிதிச்சந்தை அடிப்படையில் வீட்டுக்கடன் வட்டி நிர்ணயம்: ரிசர்வ் வங்கி

2018-12-06@ 14:18:06

மும்பை : அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நிதி சந்தையின் அடிப்படையிலேயே வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் தங்களின் அடிப்படை விகிதங்களின் படியே இதுவரை வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் முதல் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடன் எனப்படும் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் கருவூலத்தில் இருந்து அரசு பெறும் கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆகியவற்றை கொண்டு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வரும் ஏப்ரல் முதல் ஃபிளொட்டிங் ரேட் எனப்படும் மாறுபடும் வட்டி விகிதங்களில் புதிதாக மற்றும் ஏற்கனவே பெற்றுள்ள வீட்டு கடன்கள் நிதி சந்தையுடன் இணைக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாகவும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்