SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு

2018-12-06@ 00:59:48

திருவனந்தபுரம்: சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. .சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால், கடந்த அக்டோபரில் ஐப்பசி மாத பூஜைகளின்போதும், சித்திரை ஆட்டத்திருநாள் பூஜையின்போதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நி்லையில், கடந்த 16ம் தேதி மண்டல கால பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. இதற்கு ஒருநாள் முன்னதாக 15ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மீண்டும் 144 தடை உத்தரவு கொண்டு வரப்பட்டது.  

இதையடுத்து,பதற்றம் குறைந்ததால் தடை உத்தரவை நீக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், தடை உத்தரவை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வரை தடை உத்தரவு அமலில் இருந்தது. நேற்று முதல் மீண்டும் 4 நாட்களுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 8ம் தேதி நள்ளிரவு வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். இதற்கிடையே சபரிமலையில் ஆய்வு செய்த உயர் நீதிமன்றம் நியமித்த குழுவினர், இங்கு  செய்துள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். ் அதே நேரம், சபரிமலையில் பக்தர்கள் அதிகம் வருவதால், வருமானம் அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்