SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஏலச்சீட்டு நடத்தி 9 லட்சம் மோசடி: தலைமறைவான தம்பதிக்கு வலை

2018-12-06@ 00:34:56

வேளச்சேரி: வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஏலச்சீட்டு நடத்தி,  ₹9 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (40).  இவரது மனைவி நந்தினி (38). இருவரும் சேர்ந்து, இப்பகுதியில்  மழலையர் பள்ளி நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் பார்ட்னராக சேர்த்து கொள்வதாகக்கூறி, 4 பெண்களிடம் தலா ₹1 லட்சம் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்களிடம் மாதச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு எந்த சம்பளத்தையும் கொடுக்காமல் மாதச்சீட்டுக்கு அட்ஜஸ்ட் செய்துவிட்டதாக கூறி மாதக்கணக்கில் சம்பளம் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும், அதேப் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்களை மாதச்சீட்டில் சேர்த்து ₹1 லட்சம், ₹2 லட்சம் சீட்டு நடத்தி பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தீபாவளி பண்ட் என்ற பெயரில் 200க்கும்  மேற்பட்ட பெண்களை  சேர்த்து ஏமாற்றியுள்ளனர். இது தவிர சில பெண்களிடம் உறவினர்  திருமணத்திற்கு செல்வதற்கு நகைகள் கடனாக வாங்கி சென்று திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில், அஞ்சலி  என்பவர் கடந்த ஜூலை மாதம்   வேளச்சேரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நந்தினியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பணம் தருவதாக எழுதி கொடுத்து நந்தினி வந்துள்ளார். ஆனால் பணம், நகைகள் எதையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் முதல் பிரகாஷ், நந்தினி ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதில் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட 13 பெண்கள் தமிழ்நாடு ஏழை, எளியோர்  மற்றும் நடுத்தர மக்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் வி.எஸ்.லிங்க பெருமாள் தலைமையில் நேற்று மாலை வேளச்சேரி  காவல் நிலையத்துக்கு வந்து, ‘எங்களிடம் பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவான தம்பதியை உடனே கண்டுபிடித்து அவர்களை கைது செய்து பணம், நகைகளை மீட்டு தர வேண்டும்’’ என்று கூறினர். அதற்கு, அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, ‘‘நீங்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக’’ கூறினார். இதை அடுத்து 13 பெண்களும் தங்களிடம் ₹9 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகையை ஏமாற்றியதாக புகார் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்