SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-12-06@ 00:34:48

* ‘ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடர் சுமுகமாக நடைபெறும் என நம்புகிறேன். கடந்த காலங்களைப் போன்று சர்ச்சைகள் எழாது. இந்திய வீரர்கள் எல்லை மீறாமல் நடந்துகொள்வார்கள். அதே சமயம் போட்டி  கடுமையாக இருக்கும்’ என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.
*  ஐபிஎல் டி20 தொடரின் 2019 சீசனுக்கான ஏலம் ஜெய்பூரில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. 8 அணிகளில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ள நிலையில் மொத்தம் 1003 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு  செய்துள்ளனர்.
* முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
* 2018ல் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கோஹ்லி ₹228.09 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ளார். டோனி (₹101.77 கோடி), டெண்டுல்கர் (₹80 கோடி), பி.வி.சிந்து (₹36.5 கோடி), ரோகித் ஷர்மா  (₹31.49 கோடி), ஹர்திக் பாண்டியா (₹28.46 கோடி), ஆர்.அஷ்வின் (₹18.9 கோடி) அடுத்த இடங்களில் உள்ளனர்.
* உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடந்த 2வது லீக் ஆட்டத்தில் மலேசியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது  அதிக் 51வது நிமிடத்திலும், மலேசிய வீரர் பைசல் சாரி 55வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த பிரிவில் 4 அணிகளும் தலா 2 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் ஜெர்மனி (6), நெதர்லாந்து (3) முன்னிலை  வகிக்கின்றன. பாகிஸ்தான், மலேசியா தலா 1 புள்ளியுடன் பின்தங்கியுள்ளன.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்