SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2018-12-06@ 00:28:47

புதுடெல்லி: வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேல் தலைமையில் கடந்த 3ம் தேதி தொடங்கிய கூட்டம் நேற்று முடிந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கி டெபாசிட்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை. 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாக உள்ளது.

வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாக நீடிக்கிறது. அக்டோபர் - மார்ச் இடையே சில்லரை விலை பண வீக்கம் 2.7 சதவீதம் முதல் 3.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் ஜிடிபி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கம். 2019-20 நிதியாண்டில் ஏப்ரல் - செப்டம்பர் இடையே வளர்ச்சி 7.54 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கூட்டத்துக்கு பிறகு பேட்டியளித்த உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்