SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேரடி காஸ் மானியம் திட்டத்தில் மாற்றமில்லை : எண்ணெய் நிறுவனம் விளக்கம்

2018-12-06@ 00:28:45

புதுடெல்லி: இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சமீபத்தில் சமையல் காஸ் புதிய விலை நிர்ணயத்துக்கு பிறகு, நேரடி காஸ் மானியம் வழங்கப்படும் நடைமுறையில் மாற்றம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பஹல் திட்டத்தில் சமையல் காஸ் மானியம் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. காஸ் சந்தை விலை உயரும்போது அது மக்களை பாதிக்காத வகையில், இந்த தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. பஹல் திட்டத்தில் வங்கி கணக்கு மூலம் நேரடியாக மானியம் வழங்கப்படுவதால், உரியவருக்கு பலன் சென்று சேர்கிறது. இந்த நடைமுறையில் திருத்தமோ, மாற்றமோ மேற்கொள்ளப்பட மாட்டாது. முன்பு உள்ளது போன்றே இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2014 நவம்பர் முதல், நேரடி மானிய முறையில் 23 கோடிக்கும் மேற்பட்டோருக்கு சுமார் 94,500 கோடி மானியம் வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்