SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறுகியகால கடன் வட்டி 6.5 சதவீதமாக நீடிப்பு

2018-12-06@ 00:28:43

புதுடெல்லி: விண்ணப்பித்து 4 மணி நேரத்தில் பான் கார்டு வழங்கும் நடைமுறை ஓராண்டுக்குள் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு கண்டிப்பாக தேவை. இதுதவிர, வங்கி கணக்குகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்யவும், டெபாசிட் செய்யவும் பான் எண் கேட்கின்றனர். சில வங்கிகள் கணக்கு துவக்குவதற்கே பான் எண் கட்டாயம் வேண்டும் என்று கூறுகின்றன. பான் கார்டு பெறும் நடைமுறையை விரைவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் சுசில் சந்திரா கூறியதாவது:

முன்கூட்டிய வரி செலுத்துதல், ரீபண்ட், விசாரணைக்கான வழக்குகளை தேர்வு செய்தல், விசாரணையை முடித்தல் போன்றவற்றுக்கு தொழில்நுட்ப உதவியுடன் தீர்வு காண வரிகள் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுபோல் பான் கார்டுகளும் மிக விரைவாக வழங்கும் நடைமுறையை செயல்படுத்த இருக்கிறோம். அதாவது, விண்ணப்பித்து 4 மணி நேரத்திலேயே பான் எண் கிடைத்துவிடும். இது இன்னும் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருமான வரி கணக்குதாக்கல் செய்வது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. ரீபண்ட் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துவது அதிகரித்துள்ளது. எனினும், மத்திய அரசு வரிகளை குறைக்க முன்வரவேண்டும். அப்போது வரி செலுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்