SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎப் மின்னணு சேவை பெற விவரம் சரியா இருக்கணும்

2018-12-06@ 00:28:41

* பிஎப் நிறுவனம் தாள்களற்ற மின்னணு முறையிலான சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தனது பிஎப் யுஏஎன் நம்பர், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண் உள்ளீடு செய்து, மொபைலுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டை உள்ளீடு செய்தாலே இந்த சேவைகளை பெறலாம்.
* ஆனால், இந்த விவரங்களில் சிறு தவறு இருந்தாலும் இந்த சேவையை பெற முடியாது. இதில் நிறுவனம் மற்றும் ஊழியர் என இரு தரப்பினருமே கவனமாக இருக்க வேண்டும்.
* நிறுவனத்தினர் ஊழியரின் வங்கிக்கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை மிகச்சரியாக சரிபார்த்து நிரப்ப வேண்டும்.
* தொழிலாளியின் மொபைல் எண்ணை சரியாக பதிவு செய்ய வேண்டும். அந்த எண் வேறு யுஏஎன் நம்பர் அல்லது ஊழியரின் கணக்குடன் சேர்ந்திருக்க கூடாது.
* யுஏஎன் நம்பரை பதிவு செய்து மின்னணு சேவை பெறும் ஊழியர்கள், தங்களது பாஸ்வேர்டை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். தனது மொபைல் எண்ணுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டை வேறு யாருக்கும் பகிரக்கூடாது.
* பிஎப் நிறுவனம் ஒருபோதும் தொலைபேசி அல்லது இமெயில் வாயிலாக ஊழியரின் பிஎப் கணக்கு விவரங்களை கேட்பதில்லை.
* சில பிஎப் கணக்குடன் வேறு ஒருவரின் வங்கிக்கணக்கை இணைக்கக் கூடாது. இது சட்டவிரோதமானது. முறைகேடுக்கு வழி வகுக்கும்.
* எனவே, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஆதார், வங்கிக் கணக்கு எண், மொபைல் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை மிகச்சரியாக உள்ளீடு செய்ய வேண்டும் என சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான கூடுதல் மத்திய பிஎப் ஆணையர் சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்