SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயலால் அழிந்த தென்னை மரங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு தினமும் ஒரு லட்சம் கன்றுகள் அனுப்பி வைப்பு

2018-12-05@ 14:39:05

போச்சம்பள்ளி : டெல்டா மாவட்டங்களில், கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால் போச்சம்பள்ளியில் இருந்து ஒரு லட்சம் கன்றுகள் தினமும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.  கடந்த மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் அங்கு தென்னை கன்றுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து தினமும் ஒரு லட்சம் தென்னை கன்றுகள் விற்பனைகாக செல்கிறது.

இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கேஆர்பி அணை பாசன பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. குறிப்பாக, காவேரிப்பட்டிணம், மலையாண்டள்ளி, புதூர், திம்மாபுரம், நெடுங்கல், அகரம், மருதேரி, செல்லம்பட்டி, பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, புங்கம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீண்ட காலபலன் தரும்  15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.  

 இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்க்கு வெளிமாநிலத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த மாதங்களில் வெளி மாநில தேங்காய் தமிழகத்திற்கு வந்ததால் இங்குள்ள தேங்காய்களுக்கு திடீரென மார்கெட் குறைந்து விலை கடுமையாக சரிவடைந்தது. இதனால் தென்னை விவசாயிகள் தேங்காய்களை முளைக்க வைத்து தென்னங்கன்றுகளாக விற்பனை செய்து லாபம் பார்த்து வந்தனர். இந்நிலையில்  தென்னங்கன்றுகளின் விலையும் சரிந்தது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தேங்காய்களை உடைத்து பருப்பாக உலரவைத்து விற்பனை செய்தனர்.

மற்ற மாவட்டங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால், தேங்காய் பருப்புகளும் விலை குறைந்து, விவசாயிகளுக்கு மேலும் மேலும் நஷ்டம் ஏற்பட்டது. மழை பொய்த்து போனதால் நூற்றுக்கணக்கான  தென்னை மரங்கள் காய்ந்து போனது. தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னம்பிள்ளைகளை காப்பாற்றி வந்தனர். சிலர் மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விற்று வந்தனர்.

 கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னை விவசாயிகள் இனி வாழ வழியில்லை என தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை வியாபாரிகள், டெல்டா மாவங்களுக்கு அதிகளவில் தென்னை கன்றுகளை விற்பனைக்காக அனுப்பி வருகிறார்கள். அதேபோல் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட நர்சரிகள் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னை கன்றுகள் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனைக்காக லாரி, டெம்போ மூலம் டெல்டா மாவட்டகளுக்கு  செல்கிறது. இதனால் தென்னங்கன்றுகள் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களில் ஒரு தென்னங்கன்று ₹30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ஒரு கன்று ₹80 முதல் 100 வரையில் விற்பனையாகிறது. இதனால், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, மஞ்சமேடு, பனங்காட்டூர், பண்ணந்தூர், புலியூர், உள்ளிட்ட நர்சரிகள் மற்றும் விவசாயிகளிடம் இருந்த தென்னங்கன்றுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் மற்றும் நர்சரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்