SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிப்படை வசதிகள் இல்லை புறக்கணிக்கப்படும் ஆரல்வாய்மொழி ரயில்நிலையம்

2018-12-05@ 14:36:47

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரிமாவட்டத்தின் நுழைவு பகுதியான ஆரல்வாய்மொழியை சுற்றி அதிகமாக குக்கிராமங்கள் உள்ளன. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம், காவல் கிணறு, ஆவரைகுளம், பழவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், மாதவலாயம், தாழக்குடி, சீதப்பால், போன்ற கிராமங்கள் உள்ளன. நாகர்கோவில் - காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தின் எதிரே ரயில் நிலையம் உள்ளது.


 பெரும்பாலும் இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆரல்வாய்மொழியை மையமாக கொண்டு ஏராளமான காற்றாலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் உள்ளதால் காற்றாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அதிகமாக ஆரல்வாய்மொழி ரயில் நிலைத்திற்கு வந்து ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பல தனியார் கல்லூரிகளும், தனியார் பள்ளிகளும் உள்ளதால் மாணவ, மாணவிகளும் அதிக அளவில் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிக அளவில் பொதுமக்களும், மாணவ மாணவிகளும் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தினை ரயில்வே நிர்வாகம் படிப்படியாக புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் இச்சாலையில் தண்ணீர் பெருகி பயணிகள் செல்ல முடியாத அளவிற்கு சகதிகள் நிறைந்து காணப்படுகின்றது. இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது.


 மேலும் இந்த ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. ஆனால் இந்த இரண்டு நடைமேடைகளை சுற்றிலும் புதர்கள் அடர்ந்து காணப்படுவதால் பல முறை பயணிகள் ரயில் ஏறுவதற்கு நடைமேடையில் நிற்கும் போது பாம்புகளின் நடமாட்டத்தால் பயணிகள் அலறியடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் புதர்களை அகற்ற ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ரயில்கள் முதல் நடைமேடையில் நிறுத்தி வந்த நிலையில் திடீர் என்று இரண்டாவது நடைமேடையில் நிறுத்தி வருகின்றனர். இரண்டாவது நடைமேடைக்கு பயணிகள் செல்வதற்கான எந்த வித ஏற்பாடுகளையும் செய்ய வில்லை.

இரண்டாவது நடைமேடை எந்த வித பாதுகாப்புமின்றி நடைமேடையின் பின் பகுதியானது சுற்று சுவர் இல்லாமல் சுமார் 30 அடி பள்ளம் மற்றும் புதர் நிறைந்து உள்ளது. இதனால் குழந்தைகளுடன் வரும் பயணிகள் ரயில் ஏறும்வரை பயத்துடன் தான் இருக்க வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளத்தில் தவறி விழுந்து அடையாளம் தெரியாத முதியவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார். நீண்ட காலமாக முன்பதிவு டிக்கட் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதையும் நிர்வாகம் திடீர் என்று நிறுத்திவிட்டது. மேலும் இங்கு வரும் பயணிகளுக்கு போதுமான பொது கழிப்பிட வசதியும், சுத்தமான குடிநீர் வசதி கூட இல்லாமல் இருக்கிறது.

இதுபற்றி ஆரல்வாய்மொழி பயணிகள் நல சங்க தலைவர் விகாஸ் அகஸ்டின் கூறும் போது. ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தை திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர்.  ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதியில் மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகிறார்கள். காற்றாலை நிறுவனங்கள் உள்ளதாலும், முப்பை, பெங்களூர் போன்ற ரயில்களும், முன்பு நின்று சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இங்கு நின்று செல்ல வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட முன்பதிவு டிக்கட்  கவுண்டரை மீண்டும் திறக்க வேண்டும்.

முதலாம் நடைமேடையில் இருந்து இரண்டாம் நடைமேடைக்கு பயணிகள் செல்வதற்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல முறை ஆரல்வாய்மொழி மற்றும் நாகர்கோவில் நிலைய மேலாளருக்கும், திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளருக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தினை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் இல்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் கோரிக்கைகளை நிைறவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்