SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும், கச்சிதமானதுமாக ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன்

2018-11-30@ 15:56:03

ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும் கச்சிதமானதும் குரல் உதவியுடனான ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன், இந்த புதுரக ஜெப்-பீஸ் இயர்போன் அனுபவத்தை  அனுபவியுங்கள்.

இசைப்பயிற்சிக்காக பழையரக இயர்போன் மூலம் கொண்ட சலிப்பும் மணிக்கணக்கிலுமான கடினப்பயிற்சிகளை கைவிட்டு, ஜெப்-பீஸ் உதவியுடன் வயர்களின் சிக்கல்களின்றி தடையில்லாத இசை அனுபவத்தை பெறுங்கள். கேட்கும்போதே துள்ளியெழச்செய்யும் தெளிவான துள்ளிசை அனுபவத்தை உணர்ந்து இசையின் புது அனுமானத்தோடு மன அமைதி பெற்றிடுங்கள்.

ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட், இந்தியாவின் முண்ணனி தயாரிப்புகள் ஆகும். ஐடி துறையிலும், ஒரு அமைப்பு, மொபைல் போன்கள் / நவநாகரீக மின்னணு அணிகலன்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் போன்ற புரட்சிகரமான பொருட்களை வயர்லஸ் தொழில்நுட்பத்தில் நமது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

ஜெப்-பீஸ் ஒரு உண்மையான வயர்களில்லாத தனித்துவமான கருவியாக தரம் உயர்ந்துள்ளது. இது நமது பார்வைக்கு நல்ல ஸ்போர்டி தோற்றத்துடன் பளபளப்பு கூட்டப்பட்டு அழகாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிரத்யேகமாக பிறை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஒலிச்சிதறல் இல்லாது இயங்க கூடியது. மிகவும் கனமில்லாத வெறும் 4 கிராம்கள் மட்டுமே எடையை உடையது.

வசதியான வடிவமைப்பு ஏர்போடுகள் மிகவும் துல்லியமாக இயங்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, காதுகளுக்கு ஏற்ற வசதியான வடிவமைப்பினை கொண்டது. நீங்கள் பளூத்தூக்குபவராகவோ, மைல்கள் தூரம் ஓட்டப்பயிற்சி செய்பவராகவோ இருப்பினும் ஏர்போடுகள் தங்களது காதுகளில் இருந்து நழுவி விழாது. இதன் மூலம் தங்களுடைய முக்கிய வேளைகளில் சிறப்பாக கவனம் செலுத்தலாம்.அழைப்பு இணைத்துலும் / செயல்பாடும் :

இந்த ஹெட்செட்டுடன் ஃ போனை இணைப்பது மிக எளிதும் துரிதமுமான ஒன்றாகும். ஒருமுறை இணைத்துவிட்டால் பின் எப்போது வேண்டுமானாலும் ஒலிச்சேவையில் இருந்து குரல் சேவைக்கு உடனடியாக மாற்றிக்கொள்ள இயலும். அழைப்புகள் வரும்போது தானாகவே ஒரு இயர்போனாக மாறி துல்லியமான ஒலியினை தந்து கூடிய விரைவில்  செயல்படத்துவங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

குரல் உதவி :
 
ஆண்ட்ராய்டு மற்றும் iOS கருவிகளுடன் இணைந்து தெளிவான குரல் சேவையை பெற முடியும். இரு கருவிகளின் ஊடாக எந்தவிதமான கேள்விகளையும் கேட்டு உடனடியாக பதில்களை கூடியவிரைவில் பெற்றுக்கொள்ள இயலும். தாங்கள் பயணிக்கும் வழி மற்றும் வானிலை சம்பந்தமான கேள்விகளையும் கேட்டறிந்து கொள்ளமுடியும். இயர்போடில் உள்ள பொத்தானை இருமுறை அழுத்தம் கொடுத்து இந்த சேவையை எளிதாக பெறலாம்.

ரீசார்ஜபிள் பேட்டரி பெட்டகம்:

விரைவில் பேட்டரி அதன் சக்தியை இழந்துவிட்டதா கவலை வேண்டாம், பிரத்யேகமாக இயர்போடுகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ரீசார்ஜபிள் பேட்டரி கேஸில் வைத்துவிட்டால் கூடுதலாக 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைத்துவிடும். இந்த பேட்டரிகேஸ் மிகவும் எடைகுறைந்த, அளவில் சிறியதான கருவி என்பதால் தங்களது சட்டைப்பையில் அழகாக அடங்கிக்கொள்ளும்..

ஜெப்ரானிக்ஸ் தயாரிப்புகளை அறிமுகம் செய்து பேசும் போது இதன் இயக்குநர் திரு.பிரதீப் தோஷி கூறியதாவது, 'அனைவரும் வயர்களில்லா புரட்சியில் ஜெப்-பீஸ் உடன் இணையுங்கள், குரல் உதவி மற்றும் ஒலிச்சேவைக்காக ஆண்ட்ராய்டு மற்றும் iOS கருவிகளில் வயர்களில்லாத புரட்சியின் உச்சநிலையை அடைந்திடவும், துல்லியமான தடையில்லாத இசையை கேட்டு மன அமைதி பெறவும் எங்களோடு இணைந்திருங்கள்.'

இந்த வயரில்லாத இயர்போன்கள் கவர்ச்சிகரமான கருப்பு நிறத்தில் ,இந்தியாவின் அனைத்து முண்ணனி மற்றும் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்