SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரியாணி என்றாலே என்ன இறைச்சி என சந்தேகம் வருகிறது: வருண் ராம், அசைவ பிரியர், சாப்ட்வேர் ஊழியர்

2018-11-26@ 04:42:24

சிறுவயது முதலே அசைவ உணவு என்றாலே எனக்கு அலாதி பிரியம் தான். அசைவ உணவுகளை தேடித்தேடி அலைந்து அதை ரசித்து உண்பது என்பது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது. எனக்கு 32 வயது ஆகிறது. ஆனால், வாரத்தில் 4 நாட்களாவது அசைவ உணவை எடுத்துக்கொள்ளாமல் எனக்கு தூக்கம் வராது. அந்த அளவிற்கு அசைவ உணவு எனது வாழ்வில் ஒன்றாகிவிட்டது. அசைவ உணவுகளிலேயே கோழி மற்றும் ஆட்டுக்கறி தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மட்டன் வகைகளில் மட்டன் பிரியாணி, ஸ்பெஷல் மட்டன் கிரேவி, கொகல் பிரியாணி, மட்டன் சாப்ஸ், மட்டன் கட்லெட், செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை, மட்டன் சமோசா, மட்டன் உருளைகிழங்கு போண்டா, மதுரை மட்டன் சுக்கா போன்ற உணவு வகைகளை நான் ஓட்டல் ஓட்டலாக தேடி சென்று வாங்கி உண்பதும் உண்டு. இதேபோல், நாட்டுக்கோழி, கிரில் சிக்கன், தந்தூரி, செட்டிநாடு ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, செட்டிநாடு சில்லி சிக்கன், மதுரை நாட்டுக்கோழி வறுவல் ஆகிவற்றை நான் விரும்பி உண்பது உண்டு. ேமலும் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் ருசியான அசைவ உணவு கிடைக்கும் என்று தேடிப்போய் சாப்பிடுவது வழக்கம். சென்னையை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாகவே தான் அசைவ உணவகங்கள் என்பது அதிகமாகியுள்ளது. அதற்கு முன்பு சைவ உணவு ஓட்டல்களே அதிகம். தற்போது சென்னையில் 75 சதவீத ஓட்டல்கள் அசைவ உணவு ஓட்டல்களாகவே உள்ளது.

இப்படி இருக்கும் போது கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் நாய்க்கறி பிடிபட்டதாக வதந்திகள் பரவியது, முன்பெல்லாம் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை ஓட்டல்களுக்கு தனியாக சென்று அசைவ உணவு சாப்பிடுவதும் வழக்கம். இப்போது ஓட்டல்களுக்கு சென்று அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு தயக்கமாக உள்ளது. அப்படி ஆர்டர் செய்து சாப்பிடும் போது எழும்பூர் ரயில்நிலையத்தில் இறைச்சியை பறிமுதல் செய்த சம்பவங்கள் தான் சாப்பிடும் போது ஞாபகம் வருகிறது. எனவே இது போன்று இறைச்சிகளை பறிமுதல் செய்தால் அது என்ன இறைச்சி என்று உறுதி செய்து அதன்பிறகு தான் கருத்து கூற வேண்டும். ஆனால், தவறாக அதை நாய் இறைச்சி என்று கூறியதால், மட்டன் சாப்பிடவே தயக்கமாக உள்ளது. அதே நேரத்தில், அன்று பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி நாய்க்கறியா அல்லது ஆட்டிறைச்சியா என்பதை விட அன்று பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் கெட்டுப்போனதாகவும் கூறுகின்றனர். எனவே இது போன்ற கெட்டுப்போன இறைச்சி வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்ெபல்லாம் தமிழகத்தின் கிராம பகுதிகளில் இருந்து நகரத்திற்கு ஆடுகளை வாங்கி வந்து இறைச்சிக்கு விற்பார்கள். அதனால் நமக்கு அது என்ன இறைச்சி என்று தெரியும். தற்போது வடமாநிலத்தில் இருந்து ஆடு இறைச்சியை வாங்குவதால் அது என்ன இறைச்சி என்று சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் தற்போது ஓட்டல்களுக்கு சென்று அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு சற்று பயமாகத்தான் உள்ளது. இனிமேல் மட்டன் சாப்பிட வேண்டும் என்றால் சொந்த ஊருக்கு செல்லும்போது நேரடியாக இறைச்சி அறுத்து வாங்கி தான் சாப்பிட வேண்டும். உணவு என்பது பசிக்கு மட்டும் இல்லாமல் ருசிக்காகவும் தான். அப்படிபட்ட சூழ்நிலையில், இறைச்சியே என்னவென்று ெதரியாமல் பயத்திலேயே சாப்பிடும் எண்ணத்தை ஏற்படுத்தி இருப்பது எங்களை போன்ற அசைவ உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்ெபல்லாம் தமிழகத்தின் கிராம பகுதிகளில் இருந்து நகரத்திற்கு ஆடுகளை வாங்கி வந்து இறைச்சிக்கு விற்பார்கள். அதனால் நமக்கு அது என்ன இறைச்சி என்று தெரியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்