SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; போலீஸ் சுட்டுக்கொலை: 2 பேர் படுகாயம்

2018-11-19@ 00:55:40

ஸ்ரீநகர் : காஷ்மீரில் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் குண்டு வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் கான்ஸ்டபிள் கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உளள காகபூராவில் புதிதாக சிஆர்பிஎப் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருவதையொட்டி புதிதாக இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மீது தீவிரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும்  தாக்கினர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து சுதாரித்த சிஆர்பிஎப் வீரர்கள், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கும் சண்டை நீடிப்பதால் பதற்றம் நிலவுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்