SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணிமாற்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வழக்கு

2018-11-19@ 00:55:39

புதுடெல்லி: பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ டிஎஸ்பி அஸ்வானி குமார் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா மனு செய்துள்ளார். இந்நிலையில், சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்த சிபிஐ டிஎஸ்பி அஸ்வானி குமார் குப்தா, அவர் ஏற்கனவே பணியாற்றிய மத்திய உளவுத்துறைக்கு (ஐ.பி) மாற்றப்பட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு செய்துள்ளார். அதில், ‘நான் ஐ.பி.யில் இருந்து சிபிஐ.க்கு கடந்த 2014ம் ஆண்டு மாற்றப்பட்டேன். என்னை மீண்டும் ஐ.பி.க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது  நியாயமற்றது, அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்