SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோனியாவை காங்கிரஸ் தலைவராக்க சீதாராம் கேசரியின் பதவி பாதியில் பறிக்கப்பட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

2018-11-19@ 00:55:33

மகாசாமுந்த்: ‘‘சோனியாவை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்பதற்காக சீதாராம் கேசரியின் பதவி பாதிலேயே பறிக்கப்பட்டது’’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் இருதினங்களுக்கு முன் பேசிய பிரதமர் மோடி, ‘நேரு குடும்பத்தை தவிர வெளிநபரை தலைவராக நியமிக்க காங்கிரசால் முடியுமா?’ என சவால் விடுத்தார். இதற்கு பதிலளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த நேரு குடும்பத்தினர் அல்லாதோர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இந்நிலையில், சட்டீஸ்கரின் மகாசாமுந்த் நகரில் நேற்று நடந்த பாஜ.வின் இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதை நாடறியும். சோனியா காந்தியை காங்கிரசின் புதிய தலைவராக்க வேண்டும் என்பதற்காக, சீதாராம் கேசரி 5 ஆண்டுகள் முழுமையாக தலைவர் பதவி வகிக்க விடாமல் தூக்கி எறியப்பட்டார்.  

முன்பு, மத்தியில் ரிமோட் கன்ட்ரோல் அரசு நடந்தது. அரசை ஆட்டிப்படைத்த ரிமோட் கன்ட்ரோல், இப்போது பாஜ.வை பார்த்து பயப்படும் குடும்பத்தின் கையில்தான் இருந்தது. 4 தலைமுறையாக ஒரே குடும்பத்தின் ஆட்சி நாட்டில் நடந்துள்ளது. அந்த ஆட்சியால் அவர்கள் மட்டுமே பயன் அடைந்தார்களே தவிர நாட்டுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. மக்களின் நலனைப் பற்றி சிந்திக்காத அவர்கள், தற்போது மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக கூறுவதை எப்படி நம்ப முடியும்? இவ்வாறு அவர் பேசினார்.

இன்று தொழிலதிபர்கள் கூட்டம்
இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்க, மத்திய பாஜ அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான இதில், பாஜ அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு உலக வங்கியின் ‘எளிதாக தொழில்புரியும் நாடுகள்’ பட்டியலில் 100வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த அக்டோபர் 31ல் வெளியிடப்பட்ட புதிய பட்டியலில் வெறும் 23 இடங்கள் மட்டுமே முன்னேறி 77வது இடத்தை பிடித்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்பதால், தொழில் புரிவதை எளிதாக்குவது தொடர்பாக தொழிலதிபர்கள், நிபுணர்களின் கருத்தை அறிய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. உலக வங்கி பட்டியலில் முதல் 50 நாடுகளுக்குள் இடம் பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டீஸ்கரில் பிரசாரம் ஓய்ந்தது நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு
சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 12ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 72 தொகுதிகளுக்கு நாளை இங்கு 2ம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடந்த 12ம் தேதி நக்சல் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் உட்பட 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அடுத்த மாதம் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. 2ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்