SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்வேறு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வந்துள்ள புகார்களை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்: அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவு

2018-11-19@ 00:55:31

சென்னை: பல்வேறு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வந்துள்ள புகார்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களும் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 40 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளன. இந்த சொத்துக்களை உரிய வழிகாட்டி மதிப்பின் பேரில் தான் குத்தகை அல்லது வாடகைக்கு விட வேண்டும். ஆனால், ஒரு சில அதிகாரிகள் குத்தகை, வாடகை குறைத்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால், கோடிக்கணக்கில் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அதேபோன்று கோயில் வருமானத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நகைகள் கையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மீது இணை ஆணையர், உதவி ஆணையர் என 126க்கும் மேற்பட்டோர் மீது அறநிலையத்துறையில் புகார் உள்ளது. இதில், இணை ஆணையர், உதவி ஆணையர், கோயில் மேலாளர், உதவியாளர் உட்பட பலர் மீதும் 17 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்று நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் மீது 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அறநிலையத்துறையில் 126க்கும் மேற்பட்டோர் மீது  பல ஆண்டுகளாக புகார்கள் நிலுவையில் உள்ளது. இதுவரை அதன் மீது எந்த விசாரணையும் நடக்கவில்லை.  இதனால், தவறு செய்த அதிகாரிகள் பலர் தண்டனையில் இருந்து தப்பித்து இருப்பதாகவும் தெரிகிறது. இது  தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் டி.கே.ராமச்சந்திரனுக்கு ஏராளமான குற்றச்சாட்டுகள் வந்தது. இதை தொடர்ந்து புகார்களுக்கு ஆளான அதிகாரிகள் மீது விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது கூடுதல் ஆணையர் (விசாரணை) கூடுதலாக பொறுப்பேற்றுள்ள சென்னை மண்டல இணை ஆணையர் லட்சுமணன் அதிகாரிகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது, புகாருக்கு ஆளான ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்