SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்

2018-11-18@ 00:33:16

இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த  ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் மீண்டும் களமிறங்க இருக்கின்றன.  புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா மோட்டார்சைக்கிள்கள்  வர இருப்பதால், பெரும்  எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஜாவா பிராண்டில் மொத்தம் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வர இருக்கிறது. சட்டென பார்க்கும்போது, இது ராயல் என்பீல்டு புல்லட்டின் சாயலை பெற்றிருப்பதால், ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான  எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், இன்ஜின் அமைப்பு, மட்கார்டு உள்ளிட்டவை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் சாயலையே பெற்றுள்ளது. எனினும், இருக்கை அமைப்பும், பின்புற  மட்கார்டும் மட்டுமே ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய தனித்துவத்தை பெற்றிருக்கின்றன.

இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்போக்ஸ் வீல், பெட்ரோல் டேங்கில் ஜாவா நிறுவனத்தின் பிராண்டு முத்திரை, பிரேக் சிஸ்டம், கைப்பிடிகள் மற்றும் டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவை பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களை  பிரதிபலிக்கும் விதத்தில், மாற்றம் அதிகம் இல்லாமல் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில், ஜாவா நிறுவனத்தின் 293சிசி இன்ஜின் இடம்பெற்றிருக்கும் என  கருதப்படுகிறது. இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பியூயல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதால், இது நவீன யுக  இன்ஜின் என கூற முடியும். அத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதும் என்பதும் இதன் முக்கிய சிறப்பு. இது, பழைய ஜாவா மோட்டார்சைக்கிள் போன்றே, இரட்டை குழல் சைலென்சர்களுடன் வர இருக்கிறது.

 இந்த இன்ஜின் நடுத்தர நிலையில், மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அத்துடன், 2 ஸ்ட்ரோக் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் போன்றே, தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தையும் பெற்றிருக்கும்  என்பது ஜாவா பிரியர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இப்புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட  உள்ளது. இது, இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நிச்சயம் நேரடி போட்டியை கொடுக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்