SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்காலில் தரைதட்டிய கப்பலை மீட்க மும்பையில் இருந்து 2 கப்பல்கள் வருகை

2018-11-17@ 21:10:27

காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் தூர்வாரும் பணியில் மும்பையை சேர்ந்த தனியார் கப்பல் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் கஜா புயல் 15ம் தேதி கரைகடக்கிறது என்ற தகவல் கிடைத்ததும் அந்த  தூர்வாரும் கப்பல், கரையில் இருந்து  வெகுதொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டது. ஆனாலும் கஜாவின் தாக்குதலில் அந்த  கப்பல் கரையை நோக்கி அடித்து வரப்பட்டு, காரைக்கால் - தமிழக எல்லையான மேலவாஞ்சூர் அருகே கடலில் தரைதட்டி நின்றது. தற்போது அந்த கடல் பகுதியில் தண்ணீர் மட்டம் குறைவாக உள்ளது. எனவே அந்த கப்பலைமீண்டும் கடலுக்குள் இழுக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆனாலும் மீட்பு பணிக்காக மும்பையில் இருந்து 2 கப்பல்கள் காரைக்கால் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அந்த கப்பல் நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதில் தொழில் நுட்ப வல்லுனர்கள் வருகிறார்கள்.

அவர்கள் வந்ததும் தரைதட்டியுள்ள கப்பலை மீட்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்துகிறார்கள்.  தண்ணீர் குறைந்த பகுதியில் கப்பல் சிக்கி இருப்பதால் அதை கடலுக்குள் இழுக்க முடியுமா, அல்லது அதை உடைத்து எடுப்பதா என்பதை நாளை வரும் வல்லுனர்கள் முடிவு செய்கிறார்கள். இதற்கு முன் இதே பகுதியில் 2 கப்பல்கள் தரை தட்டி உள்ளன. அதில் ஒன்றை உடைத்தும், இன்னொன்றை இழுத்தும் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பலில் கேப்டன் உள்பட 10 பேர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் கப்பலிலேயே இருப்பதால் அவர்கள் கப்பலிலேயே உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்