SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யத்தில் 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடக்கம்; உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

2018-11-17@ 12:21:27

வேதாரண்யம்: கஜா புயல் கடுமையாக தாக்கியதில் வேதாரண்யம் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யத்தில் 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 62 முகாம்களில் 32,000 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அடிப்படை வசதியின்றி தவித்து வருவதாகவும், நிவாரண முகாம்களில் போதுமான உணவு, மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் முகாம்களை ஆய்வு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டிய பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சாலைகளில் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றி வருகின்றனர்.

தமிழக காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கக் கடலில் உருவான கஜா’ புயல் நாகையில் கரையை கடந்தது. 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் கஜா கோரதாண்டவம் ஆடியது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்