SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயல் பாதித்த தரங்கம்பாடியில் மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்

2018-11-17@ 11:37:03

நாகை: புயல் பாதித்த தரங்கம்பாடியில் மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தை நோக்கி வந்த கஜா புயல் கடுமையாக தாக்கியதில் கடலூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.

இந்த பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் 81 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்கம்பங்கள், மரங்கள், பயிர்கள் நாசமாயின. தற்போது அங்கு நிவாரண பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நிவாரண பணிகளில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவாரண பணிகளை பார்வையிட்ட அவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்