SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவர் கே.பி. சசிகலா கைது : கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்

2018-11-17@ 10:58:07

திருவன்ந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவர் கே.பி. சசிகலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு சபரிமலை கர்மசமிதி என்ற இந்து அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கேரளாவின் பெரம்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நேற்று இருமுடிகட்டிக் கொண்டு சபரிமலை சென்ற இந்து ஐக்கிய சபையின் மாநில தலைவர் கே.பி.சசிகலா ஒரு செயற்பாட்டாளர் என்பது போலீசாரின் புகார் ஆகும். பாரதிய ஜனதா ஆதரவாளரும் 50 வயதை தாண்டியவருமான கே.பி.சசிகலாவை போலீசார் சபரிமலைக்குள் அனுமதிக்கவில்லை. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

ஆனால் தடையை மீறி சென்ற கே.பி.சசிகலா கைது செய்யப்பட்டார். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தற்போதைய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பால் கன்னியாகுமரியில் இருந்து செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை பிரவேசம் நடந்த நேற்று கேரளா சென்ற பிரபல பெண்ணியம் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். அவர் நீதிமன்றத்தின் உதவியை நாட உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்