SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயல் எதிரொலி: நாகை துறைமுகத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

2018-11-15@ 14:37:15

நாகை: கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 9-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, பாம்பன் துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. தீவிர புயலாக மாறியுள்ள கஜா புயல் வேகமாக நெருங்கி வருவதால் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. துறைமுகம் இருக்கும் பகுதியில் புயல் கடக்கும் வாய்ப்பு இருந்தால் 10-ம் எண் கூண்டு ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலானது இன்று 11 மணி நிலவரப்படி நாகை மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. மீண்டும் அது 30 கிமீ பின் நோக்கி சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடலூருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தற்போது சொல்லப்படுகிறது. அதன் காரணமாக கடலூரில் துறைமுகத்தில் 9-எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  9-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது இந்த துறைமுகத்தை அல்லது அதன் அருகே கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலினால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அச்சுறுத்தப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது வானிலை மையத்தோடு தகவல் தொடர்பை சம்மந்தப்பட்ட துறைமுகம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது என்று அர்த்தம். அப்படி பாதிக்கப்படும் நிலையில் தான் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். அது தான் தற்போது நாகையில் ஏற்பட்டுள்ளது. நாகை ,மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது பின்னோக்கி நகர்ந்துள்ளது. இதனால் கடலூர், நாகை மிகப்பெரிய அளவு பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

3- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது உள்ளூர் முன் அறிவிப்பு, திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடும் என வானிலை துறைமுகம் என்பது அர்த்தம், அதன் பிறகு உள்ளூர் எச்சரிக்கை அதன் பிறகு, அபாயம், அதன் பிறகு பெரிய அபாயம் என எச்சரிக்கப்படும். மேலும் புயலானது மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்