குழந்தையை பறித்து சென்ற குரங்கு துரத்தியதில் மாடியில் இருந்து தூக்கி வீசியது: தாயின் கண்முன்னே பரிதாப சாவு
2018-11-14@ 00:51:10

ஆக்ரா: தாயிடம் இருந்து பச்சிளம் குழந்தையை பறித்து சென்ற குரங்கு, குழந்தையை கடித்து கொன்றது. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிறந்த 12 நாட்களே ஆன தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். இதற்காக குழந்தையுடன் வெளியே அந்த இளம்பெண் அமர்ந்திருந்தபோது அங்கே வந்த குரங்கு ஒன்று எதிர்பாராதவிதமாக இளம்பெண்ணிடம் இருந்த குழந்தையை பறித்துகொண்டு தாவி ஓடியது. இளம்பெண் கூச்சலிட்டதை அடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் குரங்கை விரட்டி சென்றனர்.
ஆனால், குழந்தையுடன் குரங்கு மரத்திற்கு மரம் தாவியது. பின்னர் அருகே உள்ள வீட்டின் மாடியில் குழந்தையை வீசி சென்றது. காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு
காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்பது வருத்தமானது: டிவிட்டரில் சிதம்பரம் கருத்து
புதிய இந்தியா திட்டம் மூலம் அனில் அம்பானிக்கு 30,000 கோடி பரிசு: மோடி மீது ராகுல் பாய்ச்சல்
புல்வாமா தாக்குதல் பற்றி அறிந்த பிறகும் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
ராணுவ தளவாட பொதுத்துறை நிறுவனங்கள் அன்னிய சந்தையை பிடிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!