SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: திருச்சியில் இளைஞர்கள் குவிந்தனர்

2018-11-12@ 20:56:54

திருச்சி: திருச்சியில் உள்ள 117வது பிரதேச ராணுவ படையில் 57 சிப்பாய்(பொதுப்பணி) மற்றும் எழுத்தர், சலவை பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது.சிப்பாய் பொதுப்பணிக்கு 45 சதவீத மதிப்பெண்களுடன் மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்தர் பணிக்கு கம்ப்யூட்டர் மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்து 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சலவை பணியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருகிற 17ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமில் 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்க தகுதியானவர்கள்.

 இன்று அதிகாலை 5 மணிக்கு ராணுவ பயிற்சி மையத்தில் ஆஜராக வேண்டும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களும் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை ரயில் மற்றும் பஸ்களில் தங்களது உடைமைகளுடன் திருச்சி வந்த வண்ணம் இருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இரவே வந்ததால் திருச்சி ஜங்ஷன் பகுதி முழுவதும் இளைஞர் பட்டாளமாகவே காணப்பட்டது. அவர்கள் இரவில் ஆங்காங்கே உணவு சாப்பிட்டு விட்டு ரயில் நிலையம் முன்பு மற்றும் மன்னார்புரம் ராணுவ பயிற்சி மையம் அருகிலேயே படுத்திருந்தனர்.

இன்று காலை 6 மணிக்கு இந்த முகாம் துவங்கியது. முதல்நாளான இன்று 10 ஆயிரம் இளைஞர்கள் ஆள் சேர்ப்பு முகாமிற்கு குவிந்திருந்தனர், முன்னதாக  ராணுவ பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டு வழியாக செல்ல இளைஞர்கள் கியூவில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த ராணுவ அதிகாரிகள் இளைஞர்களை சோதனையிட்டனர். இதில் உடம்பில் யாருக்கும்  பச்சை குத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்து பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் முதலில் உயரம் அளக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.  தொடர்ந்து, கலந்து கொள்ள வந்தவர்களுக்கு ஓட்ட சோதனை நடத்தப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்