SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்ற கும்பல்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

2018-11-11@ 06:42:18

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் பேசும்போது, ‘‘ஜெயலலிதாவிற்கு துரோகம்  செய்த துரோகிகளால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மெதுவாக கொல்லும் விஷம் கொடுத்து ஜெயலலிதாவை ஒரு கும்பல் கொன்றுவிட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு வேண்டாத உணவு கொடுத்திருக்கிறார்கள்.

இதுவரை நிலக்கோட்டை தொகுதிக்கு ரூ.73 கோடி செலவில் நலத்திட்டப்  பணிகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது ஆவரம்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் நாகத்தேவர், ‘‘எங்கள் கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக  எந்த திட்டமும் செய்யவில்லை’’ என மேடை முன்பு சென்று, அமைச்சரை பார்த்து கை  நீட்டி கேள்வி கேட்டார். இதனால், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், நாகத்தேவருக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்