SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்தகார் விமானம் கடத்தப்பட்டதாக திடீரென அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு: டெல்லி விமான நிலையத்தில் களேபரம்

2018-11-11@ 03:06:40

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாருக்கு ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் விமானம் எப்ஜி 312 நேற்று மதியம் 3.30க்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் வந்த பின்னர் விமானத்தை பைலட் இயக்கத் தொடங்கினார்.அப்போது திடீரென பயணிகள் பகுதியில் இருந்த அபாய எச்சரிக்கை மணி இடைவிடாமல் ஒலித்தது. ‘ஹைஜாக் பட்டன்’ எனப்படும் அந்த எச்சரிக்கை மணி விமானம் கடத்தப்படுவதை பயணிகளுக்கு தெரிவிக்கும் மணியாகும். அந்த பட்டன் ஒலிப்பதைக் கண்ட பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

அடுத்த சில நொடிகளில் பயணிகளிடையே பீதி எழுந்தது. அதனால் விமானத்தினுள் கூச்சல், குழப்பம், பதட்டம் ஏற்பட்டது. செய்வதறியாமல் விமானப் பணிப்பெண்களும் திகைத்தனர். பைலட் அறையில் இருந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தானியங்கி கருவி தகவல் அனுப்பியது. இதனால் விமான நிைலயத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, ஓடுபாதையில் இருந்து விமானத்தை, விமான நிறுத்தம் பகுதிக்கு திருப்பும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிரடிப் படையினர்  உடனடியாக விமானத்துக்கு விரைந்தனர். அதில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதில், விமானியின் கை தவறுதலாக பட்டு எச்சரிக்கை மணி ஒலித்தது தெரியவந்தது.இதனால் அந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்