SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குவைத்தில் பேய் மழை.. சாலைகளில் வெள்ளம்: வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள், கார்கள்

2018-11-11@ 03:02:02

குவைத்சிட்டி: குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் போன் மழைநீர் ஓடுகிறது. பல இடங்களில் விலை உயர்ந்த கார்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கின்றன. வெப்ப மண்டல பகுதியில் இருக்கும் குவைத்தில் மழை என்பது எப்போதாவது வரும் ஒரு விஷயமாகும். ஆனால், அங்கு கடந்த வியாழக்கிழமை முதல் தலைநகர் குவைத் சிட்டியில் கனமழை ெகாட்டித்தீர்த்து வருகிறது. கடுமையான இந்த மழையினால் நகரம் முழுவதும் சாலைகளில் பெருவெள்ளம் போன்று மழைநீர் ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் வீடுகளின் கீழ்பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. விலை உயர்ந்த கார்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. சென்னையில் பெரு வெள்ளத்தின்போது ஏற்பட்ட நிலைமையை போன்றே குவைத்சிட்டியின் நிலைமையும் காணப்படுகிறது. நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிக்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது. இதுவரையில் வெள்ளப் பாதிப்புகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முகாமல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் மேடான பகுதிகளில் இருக்கும்படியும், வீட்டின் தரைதளப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மீட்புப் பணிகளில் தொய்வு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹசம், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜோர்டானிலும் கடும் பாதிப்பு
குவைத்தைப் போன்று ஜோர்டானிலும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் வாடி மூஸா பாலைவனத்தில் 4 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  பல இடங்களில் வெள்ளம்ேபால் சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. ஜோர்டானில் சர்வதேச பயணிகள் குவியும், பெட்ரா நகரில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

 • airshow

  பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்