SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்கா கருத்து இலங்கை அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்

2018-11-11@ 02:57:34

வாஷிங்டன்: இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் அரசியல் குழப்பத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என கூறிய ரணில், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை ராஜபக்சே திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை வரும் 14ம் தேதிக்கு சிறிசேனா ஒத்திவைத்திருந்தார்.

ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை அதிபர் சிறிசேனா சந்தித்து பேசினார். ஆனால், அவர்கள் ரணிலுக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருந்தனர். ராஜபக்சேவால் அவையில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்பதால், நேற்று முன்தினம் இரவு இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தார். பொதுத்தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் எனவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக ரணில் முடிவு செய்துள்ளார். இதனால், இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் கவலை அளிக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக இலங்கையின் முந்தைய அரசுகள் அதிகளவில் கடன் பெற்றுள்ளன. அத்திட்டங்கள் எல்லாம் கேள்விக்குறியாகி உள்ளன. இலங்கை நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அரசியல் நிலைதன்மைக்கும், நாட்டின் வளமைக்கும் ஜனநாயக அமைப்புகள், நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.’’ என்றார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்