SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமித்ஷா பெருமிதம் நக்சலைட் இல்லாத மாநிலமாக சட்டீஸ்கரை மாற்றியது பாஜ

2018-11-11@ 02:48:32

ராய்ப்பூர்: சட்டீஸ்கரை தீவிரவாதம் இல்லாத மாநிலமாக மாற்றிய பெருமை ராமன் சிங் தலைமையிலான பாஜ அரசையே சாரும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார். சட்டீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. இதையொட்டி பாஜ தயாரித்துள்ள தேர்தல் அறிக்கையை ராய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
 நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாக இருந்த சட்டீஸ்கரை நக்சலைட்கள் இல்லாத மாநிலமாக மாற்றிய பெருமை முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பாஜ அரசையே சேரும். `புரட்சிக்கான ஊடகம் நக்சல்’ என தெரிவித்துள்ள ஒரு கட்சி சட்டீஸ்கருக்காக அந்த இயக்கம் எதையும் செய்யவில்ைல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாஜ கட்சி தான் உண்மையில் புரட்சி செய்துள்ளது.

ஏனெனில் நாங்கள் தான் ஏழைகள் மற்றும் அடிதட்டு மக்களுக்கு கேஸ் இணைப்பு, மின்சார வசதி, கல்வி வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம். மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் பல்வேறு அம்சங்களை கடந்த 15 ஆண்டுகளாக போராடி தகர்த்துள்ளோம். காங்கிரஸ் அரசு நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஆனால் பாஜ தனது கடும் உழைப்பால் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் பலன் அடைந்துள்ளதை உறுதி செய்துள்ளது. 4வது முறையாக சட்டீஸ்கரில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது குறைகளை நிறைவேற்றும் வகையிலான தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம்.

முதல்வர் ராமன் சிங் முந்தைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை முழுவதும் அமல்படுத்தியுள்ளார். பாஜவை மீண்டும் வெற்றி பெற செய்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும். மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் வரிசையில் இருந்த சட்டீஸ்கரை மின்சாரம் மற்றும் சிமென்ட் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம். 100 நாள் வேலை திட்டத்தை ஊழலற்றதாக மாற்றியுள்ளோம். எனவே இந்த தேர்தல் பாஜ வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்