SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜ பெண் எம்பி வலியுறுத்தல் அயோத்தியில் புத்தருக்கு சிலை அமைக்க வேண்டும்

2018-11-11@ 02:43:08

கோன்டா: ‘‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்பட வேண்டும்’’ என்று உத்தர பிரதேச பாஜ பெண் எம்பி சாவித்திரி பாய் பூலே கோரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட  வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த மாநிலத்தின் பஹ்ரைச் தொகுதியை சேர்ந்த பாஜ எம்பி.யான சாவித்திரி பாய் பூலே நேற்று அளித்த பேட்டி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரப்படி அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், புத்தர் தொடர்பான சில பொருட்கள் கிடைத்துள்ளது. எனவே, அந்த இடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட வேண்டும். பாரத நாடு புத்தருடன் தொடர்புடையது. அயோத்தியும் அவருடன் தொடர்புடையது, எனவே, அவரது சிலை அங்கு அமைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, எனவே, அனைத்து மதங்களுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்