SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் காட்டுத் தீ 9 பேர் பலி; மக்கள் ஓட்டம்

2018-11-11@ 02:37:29

பாரடைஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் பலியாகினர். பல ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பட்டே மாவட்டத்தின் பாரடைஸ் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத் தீ பற்றியது. பலத்த காற்று வீசியதால் வனப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது. இதேபோல், தெற்கு கலிபோர்னியாவின் வென்சுரா மாவட்டம் அருகேயுள்ள தவுசன்ட் ஓக்ஸ் வனப்பகுதி உள்ளிட்ட 2 இடங்களிலும் காட்டுத்தீ பரவியது.

பாரடைஸ் பகுதியில் பரவிய தீயை அணைக்க 2,200 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தண்ணீர் லாரிகளும் விரைந்துள்ளன. அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.  எனினும், தீயை கட்டுப்படுத்த முடியாததால் பாரடைஸ் பகுதியில் உள்ள 26 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. காட்டுத்தீ பரவியதில் பாரடைஸ் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன, ஒரு மருத்துவமனை, கேஸ் நிரப்பும் நிலையம், பல உணவு விடுதிகள், வாகனங்களும் எரிந்து சாம்பலாகின. காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் பலியானதாக  மாவட்ட ஷெரிப் ஹொனியா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘`பாரடைஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் தீப்பற்றியதில் அதில் இருந்த 4 பேர் கருகி பலியாகினர். வாகனத்திற்கு வெளியே ஒருவரும், மேலும் 3 பேர் வீடுகளுக்கு வெளியேயும், ஒருவர் வீட்டுக்குள்ளும் என மொத்தம் 9 பேர் கருகி பலியாகி உள்ளனர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் காணவில்லை’’ என்றார். இதேபோல், தெற்கு கலிபோர்னியா பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வென்சுரா மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘காட்டுத் தீ காரணமாக 35 ஆயிரம் ஏக்கரில் இருந்த மரங்கள் எரிந்து நாசமாகி விட்டன. வன்சுரா மட்டுமின்றி அருகேயுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த மக்களையும் வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்