SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓடும் பஸ்சில் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் அபேஸ் பாரிமுனை அருகே துணிகரம்

2018-11-11@ 02:04:15

சென்னை: அரக்கோணம் வெங்கடேசபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த குமார் (52), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், தனது நண்பர் வெங்கடேஷ் (45) என்பவருடன் நேற்று கடைக்கு பொருள் வாங்குவதற்காக ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தார். அங்கிருந்து மாநகர பஸ்சில் பாரிமுனை பகுதிக்கு புறப்பட்டனர். கந்தசாமி கோயில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, குமார் தனது பேண்ட் பாக்கெட்டை பார்த்தபோது அதில் வைத்திருந்த ₹2 லட்சம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்

* அம்பத்தூர், பானு நகர், 7வது அவென்யூவை சேர்ந்த வாசுதேவன் (44) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 6  சவரன் நகை, ஒரு ஜோடி  வைர கம்மல், மூன்று கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த  வசந்தகுமார் மகள் திரிஷா (12), வடிவேலு மகள் சுவாதி (12) ஆகிய இருவரும்  புது வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு  படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற இருவரும் திடீரென  மாயமாகினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
* புதுவண்ணாரப்பேட்டை ஜெ.இ.கோயில்  தெருவில், லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட மாவா, 50 கிலோ சீவல் பாக்கு, 25 கிலோ  ஜர்தா, 25 கிலோ சுண்ணாம்பு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுதொடர்பாக, திருவொற்றியூரை  சேர்ந்த தினேஷ்குமார் (35), லட்சுமிபதி ஆகிய  இருவரை கைது செய்தனர்.
* அடையாறு திரு.வி.க. பாலம் அருகே கூவம்  ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலத்தை போலீசார் மீட்டு, ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார் என  விசாரிக்கின்றனர்.
* அம்பத்தூர், மேனாம்பேடு, ஆறுமுகம் நகர்,  பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டு, மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பாலியல் தொழில் நடத்தி வந்த அம்பத்தூரை சேர்ந்த  தினேஷ்குமார், வெற்றி, செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.
* மாங்காடு அடுத்த கொழுமனிவாக்கம், யாதவாள் தெருவில் உள்ள ஒரு கடையில்  விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல்  செய்தனர். இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த நரசிங்க மூர்த்தி (34) என்பவரை  கைது செய்தனர்.
* குன்றத்தூர்  சடையாண்டீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள மளிகை கடையில் இருந்த 25 கிலோ குட்கா  பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த குன்றத்தூரை  சேர்ந்தவர் ராபின் (36) என்பவரை கைது செய்தனர்.

2 குழந்தைகளுடன் ஆசிரியை மாயம்
ஆவடி, குமரன் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (35). இவரது மனைவி ஜாஸ்மின் (32), தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஜேக்கப் (8), லில்லி எலிசபெத் (4) என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த 28ம் தேதி ஜாஸ்மின் நடத்தையில் சந்தேகப்பட்டு கிருபாகரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜாஸ்மின், குழந்தைகளுடன் வீட்டை விட்டு மாயமானார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
திருவல்லிக்கேணி, பெல்ஸ் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் ஆள்நடமாட்டம் இருந்ததால், மர்மநபர்கள் ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்