SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

2018-11-11@ 01:56:49

சென்னை: அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று (11ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி எஸ்வந்த்பூர் - ஹவுரா ரயில் 120 நிமிடம் தாமதமாகவும், பெங்களூரு - காக்கிநாடா ரயில் 90 நிமிடம் தாமதமாகவும் ஜோலார்பேட்டையில் இருந்து இயக்கப்படும். பெங்களூரு - அரக்கோணம் பயணிகள் ரயில் ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், சென்னை- அரக்கோணம் இடையே இன்றும், நாளையும் பராமரிப்பு பணி நடக்கிறது. அதையொட்டி இன்று (11ம் தேதி) சென்னை சென்ட்ரல் - கோவை ரயில் திருவாலங்காட்டில் இருந்து, 115 நிமிடம் தாமதமாகவும், சென்னை சென்ட்ரல் - ஈரோடு ரயில் திருவாலங்காட்டில் இருந்து 170 நிமிடம் தாமதமாக புறப்படும்.

சென்னை சென்ட்ரல் - பெங்களூரு ரயில் கடம்பத்தூரில் இருந்து 140 நிமிடம் தாமதமாகும். சென்னை சென்ட்ரல் - எஸ்வந்த்பூர் ரயில் திருவாலங்காட்டில் இருந்து 115 நிமிடம் தாமதமாகவும், கோரக்பூர் - திருவனந்தபுரம் ரயில் திருவள்ளூரில் இருந்து 115 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் திருவள்ளூரில் இருந்து 115 நிமிடம் தாமதமாகவும், மும்பை - சென்னை மெயில் அரக்கோணத்திலிருந்து 15 நிமிடம் தாமதமாகவும், எம்எம்சியில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணத்திற்கு புறப்படும் ரயில், திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும். எம்எம்சியில் இருந்து இரவு, 10.45 மணிக்கு அரக்கோணத்திற்கு புறப்படும் ரயில் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதேபோல் நாளை (12ம் தேதி) சென்னை சென்ட்ரல் - ஈரோடு ரயில், திருவாலங்காட்டில் இருந்து, 180 நிமிடம் தாமதமாகவும், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு மெயில் கடம்பத்தூரில் இருந்து, 140 நிமிடம் தாமதமாகவும்,  கொர்பா - திருவனந்தபுரம் ரயில் திருவள்ளூரில் இருந்து, 115 நிமிடம் தாமதமாகவும், சென்னை சென்ட்ரல் - மும்பை ரயில் திருவள்ளூரில் இருந்து, 105 நிமிடம் தாமதமாகவும், மும்பை - சென்னை மெயில் அரக்கோணத்தில் இருந்து, 15 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். எம்எம்சியில் இருந்து இரவு, 10.10 மணிக்கும், 10.45 மணிக்கும் அரக்கோணத்திற்கு புறப்படும் ரயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும், என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்