SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டுமான பணி முடியும் நிலையில் விபத்தில் சிக்கினார்.. புற்றுநோயால் இறந்த மனைவிக்கு மினி தாஜ்மகால் கட்டியவர் சாவு: உ.பி.யில் சோகம்

2018-11-11@ 01:49:48

காஜியாபாத்: புற்று நோயால் இறந்த மனைவிக்கு மினி தாஜ்மகால் கட்டிய ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர், சாலை விபத்தில் பலியானார். உத்தர பிரதேச மாநிலம், புலாந்சாகர் மாவட்டம், காசர் காலன் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் பைசுல் ஹசன் கதரி (83). இவரது மனைவி தாஜ் முல்லி பேகம், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம், தொண்டை புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி இறந்தார். மனைவியின் மீது அளவற்ற பாசம் கொண்ட பைசுல், தன்னுடைய விவசாய நிலத்தின் ஒருபகுதியை தேர்வு செய்து, அங்கே மனைவியின் உடலை புதைத்தார்.

பின்னர், டெல்லியில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை போன்று, ஒரு மினி தாஜ்மகாலை கட்ட முடிவு செய்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மினி தாஜ்மகால் கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து சென்ற பைசுல், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். பைசுல் ஹசன் கதரியின் உறவினர் அஸ்லாம் கூறுகையில், ‘‘பெரியவர் பைசுல் ஹசன் கதரியின் மனைவி தாஜ் முல்லி பேகம் சடலம், மினி தாஜ்மகாலில் புதைக்கப்பட்டுள்ளால், அவரின் சடலத்தையும் அங்கேயே புதைத்து விட்டோம். அவரது கனவான மினி தாஜ்மகாலை நாங்கள் கட்டி முடிப்போம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்