SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளம்பெண்கள் வந்தால் கோயிலை மூடுவது குறித்து பா.ஜ. தலைவரிடம் ஆலோசனையா? சபரிமலை தந்திரி விளக்கம்

2018-11-11@ 01:44:15

திருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்கள் வந்தால் கோயிலை மூடுவது தொடர்பாக, பாஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளையிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் தேவசம்போர்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். சபரிமலையில் கடந்த ஐப்பசி மாத பூஜையின்போது கொச்சியை சேர்ந்த ரெஹனா பாத்திமா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் டிவி நிருபர் கவிதா ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் போலீசாரால் சன்னிதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் சபரிமலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது இளம்பெண்கள் தரிசனத்திற்கு வந்தால் சபரிமலை கோயில் நடையை மூடிவிடுவேன் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறினார்.

அதன்பிறகே போலீசார் இளம்பெண்கள் இருவரையும் திரும்ப பம்பை அழைத்து வந்தனர். தந்திரியின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்பட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநில பாஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், தந்திரி கண்டரர் ராஜீவரர் தன்னிடம் ஆலோசித்த பின்னரே சபரிமலை நடையை மூடுவதாக அறிவித்தார் என்று கூறினார். இந்த பேச்சுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தந்திரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இதையடுத்து தந்திரி கண்டரர் ராஜீவரர் தேவசம்போர்டுக்கு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சபரிமலையில் ஆச்சார விதிமீறல் நடந்தால் கோயிலை மூடுவது தொடர்பாக பாஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளையிடம் நான் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. அவருடன் மட்டுமல்லாமல் வேறு யாருடனும் நான் சட்ட ஆலோசனை பெறவில்லை. சபரிமலையில் ஆச்சார விதிமீறல் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பந்தளம் அரண்மனையில் இருந்து எனக்கு முறையான உத்தரவு வந்தது. எனது பதவிக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் நான் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்