SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவனந்தபுரம் தீ விபத்தில் திடீர் திருப்பம் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஊழியர்கள் 2 பேர் கைது: சம்பளத்தை குறைத்த ஆத்திரத்தில் தீ வைத்ததாக வாக்குமூலம்

2018-11-11@ 01:42:08

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆலைக்கு தீ வைத்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் மண்விளையில் பிரபல பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் பொருட்கள் தயாரிக்கும் ெதாழிற்சாலை உள்ளது. கடந்த வாரம் இந்த தொழிற்சாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ₹500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தீவிர விசாரணையில் தீ 2 ஊழியர்கள்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

ஆலையின் கண்காணிப்பு கேமரா காட்சியில் தீ விபத்திற்கு முன் 2 ஊழியரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு நின்றது தெரியவந்தது. இதையடுத்து சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்த பிமல் மற்றும் காரியாவட்டத்தைச் சேர்ந்த பினு ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இவருவரும் ஆலைக்கு தீ வைத்தது தெரிய வந்தது. தங்கள் சம்பளத்தை குறைத்த ஆத்திரத்தில் தீ வைத்ததாக போலீசாரிடம் அவர்கள் கூறினர். விசாரணைக்கு பின்னர் இவர்களை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்